வைரத்தின் விலையும் வீழ்ச்சி..
ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரத்தின் விலை மிகக்கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஜூலை 2022-ல் 300 டாலர்களாக இருந்த ஒரு கேரட் செயற்கை வைரம் தற்போது 78 டாலர்களாக குறைந்துள்ளது. இயற்கையாக கிடைக்கும் வைரத்தின் விலையும் 25 முதல் 30 % வரை விலை குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக தங்கத்தின் மீதான விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும், சீனா தங்கத்தை வாங்கும் போக்கை மாற்றியதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் வைரம் வாங்கும் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் வைர தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சூரத்தில் சுமார் 38 ஆயிரம் பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 மாதங்களாக வைரத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறதாம். வழக்கமாக இயற்கையான வைரத்தை வாங்க சீனர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களின் உத்தி தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் தேவைக்கு அதிகமாக வைரக்கற்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், 57.7 மில்லியன் கேரட் அளவுக்கு வைரங்கள் 2023-24 காலகட்டத்தில் உயர்ந்திருப்பதாகவும்பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி 21 விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக பல்வேறு காரணிகளால் வைர விற்பனை தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது