வரி ஏய்ப்பு செய்ததா சிப்லா நிறுவனம்?
உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனம் சிப்லா. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கிறதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிபிசி அலுவலகங்களில் நடத்தியதைப் போலவே சர்வேவை சிப்லாவிலும் வருமான வரித்துறையினர் கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தினர். செக்சன் 80-ia பிரிவில் சுமார் 400 கோடி ரூபாய் தவறுதலாக ஒதுக்குப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 10 ஆண்டுகள் தொடர்ந்து வரி செலுத்தி வருவோருக்கு வழங்கப்படும் பிரத்யேக வசதியை சிப்லா தவறாக பயன்படுத்தியதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை தவறுதலாக வரி கணக்கு காட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வுக்கும் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்பதாக சிப்லா நிறுவன செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.