பாம்பு என விமர்சித்தாரா மோடி?
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை பிரதமர் மோடி, பாம்பு என்று விமர்சித்ததாக முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். we also make policy என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகத்தில்,பிரதமர் நரேந்திர மோடி, உர்ஜித் படேலை பணத்தின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு என்று விமர்சித்ததாக கூறியுள்ளார். 2018 பிப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இருந்த மோதல் போக்கை குறிப்பிட்டுள்ளார், தேர்தல் பத்திரங்களை உர்ஜித் படேல் ஆன்லைனில் மட்டுமே அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை சுபாஷ் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வெளியான 3 மாதங்களிலேயே ரெபோ வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதையும் கர்க் குறிப்பிட்டுள்ளார்.ரெபோ விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில்,அது மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை அளித்ததாகவும் கர்க் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உர்ஜித் படேலின் முடிவுகள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாகவும் கர்க் தெரிவித்துள்ளார். உர்ஜித் படேல் இயங்கும் விதம் குறித்து அருண் ஜேட்லிக்கு பிடிக்க வில்லை என்றும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையில், அருண் ஜேட்லியிடம் உர்ஜித் படேல் எதை பேசினாலும் நிதித்துறை செயலரிடம் கூறி தகவலை பரிமாறியதாக கூறப்பட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கும் அருண் ஜேட்லிக்கும் இருந்த பிரச்னையின்போது உர்ஜித்துக்கு எதிராகவே பிரதமர் செயல்பட்டதாகவும், சில முக்கிய முடிவுகளில் உர்ஜித்தின் முடிவுகள் நடைமுறை சாத்தியமற்றது என்று ஆவேசமாக பேசியதாகவும் கர்க் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.LTCG வரியை திரும்பப்பெற வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் பணத்தை பாம்பு போல உர்ஜித் பாதுகாத்து வந்ததாக பிரதமர் கூறியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.