ரஷ்யர்களின் ஐபோன்களை உலவு பார்த்ததா அமெரிக்கா?
உலகிலேயே சைபர் துறையில் அதிக பலம் வாய்ந்த நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் அண்மையில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இதனை முன்பே மிகச்சரியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உலவாளிகள் கணித்திருந்தனர். இந்த நிலையில் ரஷ்ய உலவு அமைப்பான FSBஎன்ற பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு புதிய பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி,அமெரிக்காவின் உலவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான NSa, ரஷ்யாவில் வசிக்கும் மக்களின் ஐபோன்களின் தரவுகளை அவர்களுக்கே தெரியாமல் திருடியது தெரிய வந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை FSB முன்வைத்துள்ளது. மால்வேர் வகையில் இந்த தரவுகள் அமெரிக்காவின் என்எஸ்ஏவுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா,சோவியத் யூனியன்,நேட்டோ,இஸ்ரேல், சிரியாவைச் சேர்ந்தவர்களின் செல்போன்களை ஆப்பிள் நிறுவனத்தின் உதவியுடன் NSA வேவு பார்த்துள்ளது என்ற புகாரை FSB முன்வைத்துள்ளது. இன்று வரை ரஷ்ய அதிபர் புடின் அவருக்கு என்று ஒரு செல்போனை வைத்துக்கொள்ளவில்லை என்றும் உலவு பார்க்கப்படும் பிரச்சனை இருப்பதால் அவர் இவ்வாறு செய்வதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாட்டு அமைப்புகளுமே இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். அடுத்தாண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கு வாய்ப்புள்ள நிலையில், அதிகாரிகள் யாரும் வெளிநாட்டு போன்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவ்வாறு வெளிநாட்டு போன்கள் வைத்திருப்போர் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு மாற்றியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.