26%வேறு வேலைக்கு போகிறார்களாம் தெரியுமா?
இந்தியாவில் அடுத்தாண்டு மட்டும் 25விழுக்காடுக்கும் அதிகமானோர் வேறு வேலைகளுக்கு தாவ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Boston Consulting Group என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பின்மை மற்றும் பணியாளர்கள் குறித்த தரவுகளை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி,26விழுக்காடு இந்தியர்கள் தற்போதுள்ள வேலைக்கு பதிலாக வேறு பணிகளுக்கும்,வேறு நிறுவனங்களுக்கும் மாற விரும்புகின்றனராம். இதற்கான பிரதான காரணம் சம்பளம் என்றும், சலுகைகள் ,பணி-வாழ்க்கை சமநிலை ஆகிய காரணிகள் இடம்பிடித்திருக்கின்றன.
11,000 பணியாளர்களிடம் இந்த நிறுவனம் உலகின் 8 நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. பணிநேரம், பணி சலுகைகள், நிறுவனம் மதிக்கிறதா, எவ்வளவு ரசித்து செய்கிறார்கள் வேலையை உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
பணியிடங்களில் மதிப்பு மிகவும் முக்கியம் என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 20 அம்சங்களுக்கு கலவையான பதில்களை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பணியாளர்களை தக்கவைப்பதில் மேலாளர்களின் பங்கு மிகமுக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்றத்தை தடுப்பதில் நல்ல மேலாளரின் பங்கு 72%இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஒரு நல்ல மேலாளரிடம் வேலை செய்யும் பணியாளர்கள் மகிழ்வுடனும், வேலையில் திருப்தியும் அடைவதாக தெரிவித்துள்ளனர். நல்ல மேலாளர் இல்லாத இடங்களில் தங்கள் பணி ரிஸ்காக இருப்பதாக உணர்வதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி பிரதானமான 3 காரணிகளை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். அதில் முதலாவதாக போதுமான ஆதரவு தரும் தலைமை பண்பில் இருப்பவர்கள், போதுமான வளத்தை பயன்படுத்த முடியுமா என்பதும், பின்புலம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஆகிய பதில்களை தொழிலாளர்கள் அளித்துள்ளனர்.
சிறப்பான எதிர்காலம் நோக்கிதான் அதிக பணியாளர்கள் செல்கின்றனராம். பணியாளர்களை வாடிக்கையாளர் போல நடத்துவது மிகப்பெரிய அபாயம் என்றும் BCGஅறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பணியிடங்களில் மிகமுக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்த அறிக்கை அழகாய் விவரிக்கிறது.