டிஜிட்டல் ரூபாய் பெரிய வரவேற்பு பெறலயாமே…
பேடிஎம்,கூகுள் பே, போன்பே போல இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை கடந்தமாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.இதன் ரீட்டெயில் பிரிவு டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 7 வங்கிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இல்லை என்றும் அந்த வங்கிகள் தெரிவித்துள்ளன இன்டர்நெட் பேங்கிங் எப்படி செயல்படுகிறதோ அதே பாணியில்தான் டிஜிட்டல் ரூபாய் உள்ளதாக கூறியுள்ள வங்கிகள். வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனைகளில் பெரிய மாற்றம் இல்லை என்றும் நேரம் அதிகம் எடுப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் முறையில் பணம் கொண்டுவரப்பட்டாலும் கிளெர்க் வேலை குறையவில்லை என்றும் ஹோல்சேல் திட்டத்தை ஒரு மாதமாக பயனப்டுத்தி வரும் வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிகவும் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி சொன்னாலும் நேரம் அதிகம் எடுத்துகொள்வதால்
இது பெரிய வரவேற்பை பெறவில்லை என்றே தனியார் வங்கிகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள யுபிஐ சேவை மிக விரைவாக பணத்தை அனுப்ப வசதியாக உள்ளதாலும் டிஜிட்டல் ரூபாய் சற்று பின்தங்கியுள்ளதாகவும் வங்கிகள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறவில்லை என்றாலும் வரும் நாட்களில் இது தொடர்பான கருத்துகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறது.