இந்தியாவில் வணிகம் செய்ய டிஸ்னி ஆர்வம்…
இந்தியாவில் ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டிஸ்னி நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு பேங்க்களுடன் டிஸ்னி நிறுவனம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதாவது இந்தியாவில் ஆகும் செலவுகளில் குறிப்பிடத்தகுந்த பணத்தை தாங்களும் ஏற்க டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளது.டிஸ்னி நிறுவனம் அண்மையில்தான் 21செஞ்சுரி பாகஸ் நிறுவனத்தின் ஒரு சில உரிமைகளை பெற்றிருந்தது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் வருவாய் என்பது 20விழுக்காடு வரை குறைந்துவிட்டது.
200மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து கூட்டு நிறுவனத்தின் மதிப்பு தற்போது ஒரே ஆண்டில் 50விழுக்காடு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின்3ஆவது காலாண்டில் 8 முதல் 10 மில்லியன் சந்தாதாரர்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸாரை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் கணிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை இணைத்து திரைப்படங்களுக்கான பணிகளை சோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.டிஸ்னி நிறுவனத்துக்கு விளம்பரம் மற்றும் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே நிதி சிக்கன நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி மாதம் 7ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் வணிகத்தை விட்ட இடத்தில் இருந்தே பிடிக்கும் பணிகளை டிஸ்னி நிறுவனம் செய்து வருகிறது.