பங்குகளை விற்க ஆர்வம் காட்டும் டிஸ்னி..
பிரபல நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது 30 விழுக்காடு பங்கை டாடா பிளே நிறுவனத்திடம் விற்க போராடி வருகிறது. இந்நிலையில் டிஸ்னியின் பங்குகளை வாங்க டாடா குழுமம் மறுத்து வருகிறது. டிஸ்னியின் பங்குகளை அண்மையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் விற்கப்பட்டன. இந்நிலையில் அதன் டிடிஎச் துறை பங்குகளை டாடாவிடம் விற்க முயற்சி நடக்கிறது. ஆனால் வேறு எந்த நிறுவனமும் வாங்க முன்வராததால் டாடா நிறுவனமும் சற்று தயக்கம் காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரியில் டிஸ்னியின் உள்ளூர் தயாரிப்பான ஹாட்ஸ்டாரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு டில்னி8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால் அந்த டீலில் தற்போது டாடாவுக்கு கொடுக்க முற்படும் பங்குகள் இடம்பெறாது. டாடா பிளே நிறுவனம் தனது வளர்ச்சிக்காக ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய கடந்த 2022-ல் காய் நகர்த்தியது. ஆனால் அந்நிறுவனத்தின் மதிப்பு 2019-ல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. பின்னாளில் அது 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது 2004-ல் டாடா குழுமம் பாக்ஸ் குழுமமும் இணைந்து 80:20 என்ற அளவில் டிடிஎச் சேவையை தொடங்கினர், பின்னர் கடந்த 2008-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசெக் ஹோல்டிங் நிறுவனத்திடம் 10 % பங்குகளை டாடா குழுமம் 250 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டது. எத்தனை விழுக்காடு பங்குககள் யாரிடம் உள்ளது என்று டாடா ஸ்கை நிறுவனத்துக்கு இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பல முறை நோட்டீஸ் அளித்துள்ளது. டிடிஎச் உரிம விதிகளை இறுதி செய்ய இந்த நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன