தேவையில்லாம நம்பர ஷேர் பண்ணாதிங்க!!!
தேவையில்லாத காரணங்களுக்கு கண்ட இடங்களில் செல்போன் நம்பர்களை தரவேண்டாம் என்று தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். நபர் ஒருவர் பதிவிட்ட டிவீட்டை அடுத்து இவ்வாறு விவரமாக அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதாவது டெல்லி விமான நிலையத்தில் சமூக ஆர்வலர் தினேஷ் தாகூர் என்பவர் கடை ஒன்றில் கம் வாங்கியதாகவும், கம் வாங்கும்போது கடைக்காரர் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் எண்ணை கேட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனிநபர் விவரங்கள் தடுப்புச்சட்டம் அமலுக்கு வந்த உடன் தகவல்களை தவறாக பயன்படுத்துவோருக்கு முடிவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். என்ன ஏதென கூட கேட்காமல் பலரும் தங்கள் விவரங்களை கடைக்காரர் கேட்டதும் தந்துவிட்டதாகவும் தினேஷ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்தாண்டு நவம்பரில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது. இது அமலுக்கு வந்தால் பெரிய தொகை அபராதமாக வசூலிக்கப்பட இருக்கிறது.