இந்தியாவுக்கு இழப்பீடு தருகிறதா மற்ற நாடுகள்?
பூமிப்பந்தின் மேலே உள்ள மனிதர்கள் சில காலம் வாழ்ந்தாலும் போதுமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுத்தான் செல்கிறோம் என்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்தான் கார்பன் உமிழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகள், குறைவான கார்பன் உமிழும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளுக்கு இழப்பீடு வழங்க இருக்கின்றன .இப்போது அல்ல 2050ஆம் ஆண்டில்.ஓராண்டுக்கு 1,446 டாலர் அளவுக்கு ஒரு நபருக்கு இந்த இழப்பீடு கிடைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 2018ஆம் ஆண்டு ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை என்பது 66விழுக்காடு அதிகமாகும் நேச்சுரல் சஸ்டெயினபிளிட்டி என்ற அறிவியல் ஆய்வுக்கட்டுரையில் இந்த தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 168 நாடுகளில் சூழலியல் குறித்து தரவுகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தரப்பட்டுள்ளது. தற்போதுள்ள அளவைவிட புவி வெப்பமயமாகும் அளவு ஒன்றரை டிகிரி வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியா வருங்காலங்களில் கரிய மில வாயு வெளியேற்றத்தை தடுக்க பெரிய தியாககங்களை செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகிலேயே அதிக கரியமில வாயு வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா,ஜெர்மனி,ரஷ்யா,பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கரியமில வாயு குறைவாக வெளியேற்றும் பட்டியலில் இந்தியா,சீனா,இந்தோனேசியா,நைஜீரியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகவும் வசதியில் பின்தங்கி நாடுகளுக்கு ,கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகள் அதிக இழப்பீடு தரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எகிப்தில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் , காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு என நிதி ஒதுக்க இலக்க நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய தரவு உலகளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.