மகேந்திரா கார் உங்ககிட்ட இருக்கா?..
இந்திய அளவில் மகிந்திரா கார்களுக்கு என தனி ரசிகர்களே உள்ளனர். இந்த கார் நிறுவனம் அண்மையில் எக்ஸ் யுவி ரக கார்களை அறிமுகப்படுத்தியது. அதில் எக்ஸ்யுவி 700 ரக கார்களில் சிலவற்றில் ஒயரிங் பிரச்னை இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து 1,08,306 கார்களை மகிந்திரா கார் நிறுவனம் ஆய்வு செய்ய இருக்கிறது.2021 ஜூன் 8 முதல் 2023ஜூன் 28 வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இந்த ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.எக்ஸ் யுவி 400 ரக கார்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. 2023 பிப்ரவரி 16- முதல் இந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி வரை உற்பத்தியான எக்ஸ் யுவி 400 ரக கார்களிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. ஆய்வில் ஏதேனும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் அதனை இலவசமாக மாற்றித்தரவும் மகிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மகிந்திரா கார் நிறுவனத்திடம் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்கார்பியோ ரகத்தில் இருந்தே இந்த ரக கார்களுக்கு எப்போதும் மவுசு அதிகமாகியுள்ள நிலையில்,மகிந்திரா கார் நிறுவனத்தின் இந்த சோதனை அறிவிப்பு, அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.