தங்க பத்திர திட்டம் வந்தாச்சி..எவ்வளவு தெரியுமா..
2023-24 ஆண்டுகளுக்கான தங்க கடன் பத்திர திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த திட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,926 ரூபாயாக இருக்கிறது.இதையே ஆன்லைனில் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் வெள்ளிக்கிழமை முடிந்துவிடுகிறது.இந்த திட்டத்தில் தங்கம் வாங்கினால் அப்படி என்ன நண்மை தெரியுமா, உங்கள் மூலதனம் உயரும், கூடவே இரண்டரை விழுக்காடு சந்தை மூலதனம் உயரும். 8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் கேப்பிடல் கெயின் டாக்ஸ் என்ற வரியும் கிடையாது. திருடுபோகும்,ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சமும் இருக்காது. இதனை பராமரிக்க தனிக்கட்டணம் ஏதும் கிடையாது. முதிர்ச்சி காலத்துக்கு முன்பே விற்றுவிட்டால் 20 விழுக்காடு வரி கட்டவேண்டும். 8 ஆண்டுகள் முதலீடு செய்ய தங்க பத்திரங்கள் நல்ல சாய்ஸ். தங்கத்தின் தூய்மையை பற்றிய கவலை இல்லை. பணத்தை வர்த்தகம் செய்வதைப்போலவே சந்தைகளில் வணிகம் செய்துவிட முடியும். கடனாக வாங்கினால் இதனை அடகு வைத்தும் பணம் பெறலாம். ஆன்லைனில் இந்த பத்திரங்களை வாங்கினால் சிறப்பு சலுகைகளும் இருப்பதால் இது சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.