ஆப்பிள் கார்ட் தெரியுமா? இது புதுசு!!!
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனமான எச்டிஎப்சி வங்கியுடன் வணிகத்தில் கை கோர்த்துள்ளது. ஆப்பிள் கார்ட் என்ற பெயரில் புதிய கார்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கும், எச்டிஎப்சி நிறுவன சிஇஓ சசிதர் ஜகதீசனை சந்தித்து பேசியுள்ளார். குகுள் பே, பே டிஎம் போல, ஆப்பிள் பே என்ற பேமண்ட் திட்டத்தை செயல்படுத்த NPCIயிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. Apple, Google, Amazon, Samsung ஆகிய நிறுவனங்களும் பேமன்டஸ் துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கோல்ட்மேன்சாச்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் கிரெடிட் கார்டு சேவை வழங்கி வரும் சூழிலில் ,உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவிலும் இந்த சேவை தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.