2000 ரூபாய் நோட்டு இவ்வளவு திரும்பிவிட்டது தெரியுமா..
ரிசர்வ் வங்கி ஜூலை 3 ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த தொகை கிடைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்னும் வெளியில் 0.84 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெறப்பட்ட தொகையில் 87 விழுக்காடு டெபாசிட்டாகவும்,மீத 13 %பணம் சில்லறை மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள காலத்தில் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே 19ஆம் தேதி 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்றது. உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மக்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதால் இதனை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. பணமதிப்பிழப்பின் போது ஏற்பட்ட பாதிப்பு போல இல்லாமல் தற்போது அதிக பாதிப்புகளை 2,000 ரூபாய் நோட்டுகள் ஏற்படுத்தவில்லை .செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.