கடன் இவ்ளோ குறையும் தெரியுமா?…
நோமுரா என்ற நிதிசார்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. அதில் டாடா மோட்டார்ஸின் கடன் தற்போது உள்ளதில் இருந்து 2025-ம் நிதி ஆண்டுக்குள் 60 விழுக்காடு குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத்தில் பணம் அதிகளவில் டாடா குழுமத்துக்கு கொட்டுவதால் அடுத்த நிதியாண்டில் இன்னும் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 23 நிதியாண்டில் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் வருவாய் 10.3%ஆக உள்ளதாக கூறியுள்ள அந்த மதிப்பீட்டு நிதி நிறுவனம், 24ம் நிதியாண்டில் 14.1 விழுக்காடாக உயரும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக 25 நிதியாண்டில் கடனில் 60 விழுக்காடு அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடா மோட்டார்ஸின் கடன் 575 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது 2025-ல் 230 பில்லியன் ரூபாயாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 67 ஆயிரம் கார்களை ஜேஎல்ஆர் நிறுவனம் 23 நிதியாண்டில் விற்றுள்ள நிலையில் 24ம் நிதியாண்டில் 4 லட்சத்து 70 ஆயிரம் யூனிட்டுகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜாக்குவார் கார்களை வாங்க ஆர்டர்கள் குவிந்து வருகிறது. வழக்கமான டாடா பயணிகள் வாகனம் மற்றும் வணிக வாகனங்களைப்போல ஜாக்குவார் கார்களுக்கும் ஆர்டர்கள் குவிவதாகவும் நோமூரா தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதிகள் வகுக்கப்பட இருக்கும் நிலையில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பழைய கார்கள் விற்பனை சற்று சரிந்தாலும், அடுத்தடுத்த கட்டங்களில் வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.