அதானி குழுத்துக்கு எவ்வளவு பணம் தெரியுமா ஸ்டேட் பேங்க் கொடுத்திருக்கு..?
கடந்த சில நாட்களாக மக்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர்களில் அதானி குழுமம் என்பதே பிரதானமாக இருக்கும். இந்த சூழலில் அந்த நிறுவன பங்குகள் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்த குழுமத்திற்கு வணிகம் செய்ய கடன் கொடுத்தோர் பட்டியலை அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி 2.6பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட்வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா ,அதானி குழுமம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை அதானி குழுமத்துக்கு அளித்த கடன்கள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டுதான் வழங்கினோம் என்று கூறியுள்ளார். உடனடியாக எந்த பாதிப்பையும் அந்த நிறுவன கடன் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் அதானி குழும சாம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டுள்ள சூழலில், ஹிண்டன்பர்க் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் அதானி தெரிவித்துள்ளார். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் பெரிய அளவில் அதானி குழுமத்துக்கு கடன் தரவில்லை என்றும், கடன் தந்திருந்தாலும் தற்போதைக்கு கடன் வசூலிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தற்போது தெரிவித்துள்ளனர்.