fasttag மூலம் ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
மாநில நெடுஞ்சாலைகளில் fasttag முறை மூலம் வசூலிக்கப்படும் பணத்தின் மதிப்பு 46% உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் 50,855 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலைகள் உட்பட, மொத்தமாக 34,778 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இந்தியாவில் பாஸ்ட் டேக் மூலம் மட்டும் கடந்தாண்டு 134.44 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி மட்டும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 144.19 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஃபாஸ்ட்டேக் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தும் அளவு 48% அதிகரித்துள்ளது. 2021-ல் 219 கோடி பரிவர்த்தனைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 324 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 கோடியே 40 லட்சம் பாஸ்ட் டேக்கள் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அந்த ஆணையம், நாடு முழுக்க மொத்தம் 1,181 சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 922 ஆக இருந்தது. கடந்த 2021 பிப்ரவரி 16ம் தேதிக்கு பிறகு பாஸ்ட்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது, பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு சுங்க்கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.