பெசாசுக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?
உலகிலேயே 3ஆவது பெரிய பணக்காரராக இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசாஸ் , இவர் அவ்வப்போது ஏதேனும் விசித்திரமான செயல்களை செய்வது வழக்கம். இந்நிலையில் 2002ஆம் ஆண்டு தனது நிறுவனம் வெளியிட்ட பங்குச்சந்தை பங்குகளை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரே ஒரு பங்கை வாங்கியிருக்கிறார். அதுவும் 114.77டாலர்கள் தொகைக்கு 1997ஆம் ஆண்டு முதல் அமேசானின் குறிப்பிட்ட பங்குகளை வைத்திருக்கும் ஜெப், தற்போது ஒரு பங்கை வாங்கியதை அறிவித்துள்ளார். இவரின் அந்த ஒரு பங்கு தற்போது 124 டாலர்களாக விலை போயுள்ளது. இவரின் இந்த விசித்திரமான அறிவிப்புகளால் நிறுவனத்தின் மதிப்பும் அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அவர் தனது 69,290 பங்ககுளை மக்கள் நல காரியங்களுக்காகவும்,தொண்டு அமைப்புகளுக்காகவும் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பெரிய பணக்காரர்கள் இது போன்ற நூதனமான சம்பவங்களை செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்றும் பிரபலப்படுத்த அவ்வப்போது ஏதேனும் இப்படி செய்துகொண்டே இருப்பார்கள் என்றும் சமூக வலைதலங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.