போன வாரம் எவ்வளவு இழந்தாங்க தெரியுமா?
நடுத்தர ரக பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை மட்டுமே. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த 1 வாரத்தில் மட்டும் ஆயிரத்து 290 புள்ளிகள் சரிந்துள்ளன. எச்டிஎப்சி வங்கி,இன்போசிஸ்,ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கடந்த வாரத்தில் பெரிய சரிவை சந்தித்தன. நிலைமை இப்படி இருக்க டாடா கண்சல்டன்சி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் பெரிய வெற்றி பெற்ற நிறுவனங்களாக மாறியுள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 71 ஆயிரத்து 3 கோடியே 20 லட்சம் ரூபாய் சரிந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 15 லட்சத்து 81 ஆயிரத்து 601 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மதிப்பு 46,318 கோடி ரூபாய் சரிந்தது. இதேபோல் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு 36,836 கோடி வீழ்ச்சி கண்டது. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மட்டும் 17 ஆயிரத்து 837 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. Reliance industries,TCS,HDFC bank,INFosys,HUL,ஐசிஐசிஐ,HDFC,SBI,Airtel,Lic ஆகிய 10 நிறுவனங்கள் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.