பசுமை ஹைட்ரஜன் தயாரித்தால் எவ்வளவு லாபம் தெரியுமா? ..
நடப்பாண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தியாவில் பசுமை ஹெட்ரஜன் உற்பத்தி என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொள்ளை கொள்ளை லாபமாக மொத்த திட்ட மதிப்பில் 10 விழுக்காடு அளவுக்கு ஊக்கத் தொகையாகவும் கிடைக்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய 174.9 பில்லியன் டாலர் அளவுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அதாவது ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்தால் 30 ரூபாய் வரை அரசிடம் இருந்து ஊக்கத் தொகை கிடைக்க இருக்கிறது. ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய 300 ரூபாய் செலவாகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஆற்றல் உற்பத்திக்காக இந்தியா படிமம் இல்லாத எரிபொருளை உற்பத்தி செய்ய இருக்கிறது.2070ம் ஆண்டுக்குள் இந்தியாவில் படிம எரிபொருளே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 36 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், என்டிபிசி,அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யு, அக்மீ சோலார் உள்ளிட்ட நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஏலத்தில் போட்டியிடுகின்றன.