வேலை செய்ய சிறந்த கம்பெனி இதுதான் தெரியுமா?
உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் டெக் பணியாளர்கள் பணியாற்ற சிறந்த இடம் எது என்ற கணக்கெடுப்பு லிங்க்ட் இன் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. 2023-ம் ஆண்டின் சிறந்த டெக் நிறுவனங்கள் பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் அமேசானும், 3-ம் இடத்தில் மார்கன் ஸ்டான்லி நிறுவனங்களும் பிடித்துள்ளன. டெக் நிறுவனங்களில் சிறந்த நகரங்கள் என்ற பட்டியலில் பெங்களுருவுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் மும்பை,அடுத்த இடத்தில் ஐதராபாத் அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. தொடர்ந்து முன்னேறுவதற்கான வசதி,திறமைவளர்க்கும் தகுதி, நிறுவனத்தின் நிலைத்தன்மை,பாலின வேற்றுமையில் ஒற்றுமை,கல்வித்தகுதி,நிறுவனத்தில் பணியாளர்களின் இருப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ்,மின்னணுவியல், கணினி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் டெக் பிரிவில் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கான பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் துறைகளாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் சேர விரும்பும் நபர், குறிப்பிட்ட அந்த நிறுவனம் குறித்து தீர தெரிந்தபிறகே அந்த நிறுவனத்தில் சேர வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.