பொதுத்துறை வங்கிகளில் இது அதிகமாம் தெரியுமா..
இந்தியாவின் மிகமுக்கியமான மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மாதந்தோறும் ரிசர்வ் வங்கியின் நிலை அறிக்கையை புல்லட்டினாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஏப்ரல் மாதத்துக்கான புல்லட்டினில், டிரான்ஸ்மிஷன் எனப்படும் மாறறத்தின் விகிதம் பொதுத்துறை வங்கிகளில் அதிகம் இருப்பதாகவும், தனியார் வங்ககளின் நிலை கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில் டெபாசிட் மற்றும் கடன் தரும் விகிதம் இரண்டும் சேர்ந்தது தான் டிரான்ஸ்மிஷன் என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் ஐந்தாம் தேதியிட்ட வெளியீட்டில், கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் டிரான்ஸ்மிஷன் நடந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு அளித்துள்ள கடனை நிர்ணயிப்பதில் இந்த டிரான்ஸ்மிஷனின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அண்மையில் நடந்த நிதி கொள்கை கூட்டத்தின்போது இந்த டிரான்ஸமிஷன் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் கடன் தரும்போது வட்டி விகிதம் மற்றும் முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அண்மையில் பரோடா வங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி தனது கடன் வழங்கும் விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியிருந்தது. இதே பாணியில் எச்டிஎப்சி நிறுவனமும் நடந்துவருகிறது. சில நிதி நிறுவனங்கள் கடந்த ஒன்பதாம் தேதி தான் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 60 விழுக்காடு வரை நிதி நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டன. குறிப்பாக ஸ்ரீகாம் ஃபைனான்ஸ் நிறுவனமும் தனது கடன் விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் ஐந்து புள்ளிகள் முதல் 20 புள்ளிகளாக கடன்களின் பல்வேறு வகைகளில் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.