ஓலாவின் அடுத்த அதிரடி தெரியுமா..அத்தனை பெரிய பேக்டரி தயாராகிறது…
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதுவும் நம் தமிழ்நாட்டினை குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.கிருஷ்ணகிரியில் மிகப்பெரிய பேட்டரி செல் ஆலை தயாராகி வருகிறது. இந்த புதிய பேக்டரி உலகில் உள்ள பெரிய பேக்டரிகளில் ஒன்று என்றும்,இந்தியாவிலேயே பெரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூரில் பேட்டரி செல் தயாரிப்பு ஆலை இதுவரை இந்தியாவில் கிடையவே கிடையாது. இந்த செல் ஆலை இயங்கும்பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து மின்சார வாகனங்களுக்கு செல் இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது என்று கூறப்படுகிறது. ஓலாவைத் தொடர்ந்து இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனமும் பேட்டரி செல் உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது. ஓலா எஸ்1 ஏர் என்ற புதிய பேட்டரி வாகனம், இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் டெலிவரி செய்யப்பட இருக்கிறது. இந்த வாகனம் ஏற்கனவே கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விலையாக இந்த வகை பைக்குகளின் விலை 84,999ரூபாயாக உள்ளது.ஒரு முறை சார்ஜ் செய்தால் 76 கிலோமீட்டர் வரை இந்த வாகனத்தில் பயணிக்க இயலும். நான்கரை மணி நேரத்தில் இந்த பேட்டரி வாகனம் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோமீட்டர் வேகத்தை இந்த பைக் வெறும் 4.3 விநாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனம் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக பயணிக்கும் திறன் பெற்றது.