பணக்காரங்க இங்கதான் இருக்காங்க தெரியுமா…
பணம் மற்றும் பணம் சார்ந்த தகவலை படிக்க யாருக்குத்தான் பிடிக்காது..பூமியிலேயே பணக்காரர்கள் குறித்த தரவுகளை தெரிவிப்பதில் போர்ப்ஸ் நிறுவனத்துக்கு தனி இடம் உள்ளது. இந்த நிறுவனம் புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.அதாவது உலகில் எந்தெந்த நாடுகளில் மிகப்பெரிய பணக்காரர்கள் யார் என்ற தரவு அது. இந்தாண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில் 77 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 640 பேரின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி உலகிலேயே அதிக பணக்காரர்களை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.அந்த நாட்டில் மட்டும் 735 பெரிய பணக்காரர்கள் இருக்கின்றனர். இந்தாண்டு பட்டியலில் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்,லீபிரான் ஜேம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது கடந்தாண்டு 539 பெரிய பணக்காரர்களை கொண்டிருந்த அந்த நாடு, நடப்பாண்டு 495 பேரை மட்டுமே கொண்டுள்ளது. 3-வது இடத்தில் சந்தேகமே இல்லாமல் இந்தியாதான் உள்ளது. இந்தியாவில் 169 பெரிய பணக்காரர்கள் இருக்கின்றனர்.இவர்களின் கூட்டு சொத்துமதிப்பு மட்டுமே 675 பில்லியன் அமெரிக்க டாலர், இது கடந்தாண்டை விட 75 பில்லியன் டாலர் குறைவாகும். இதற்கு காரணமாக ஹிண்டன்பர்க் அதானி அறிக்கையை ஃபோர்ப்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் ஜெர்மனிக்கு 4ம் இடமும்,அடுத்த இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.