நார்வே செய்த அதிரடி வேலை தெரியுமா?
நார்வேவின் மத்திய வங்கி தனது பட்டியலில் இருந்து 3 இந்திய நிறுவனங்களை பிளாக்லிஸ்ட் செய்திருக்கிறது.
இதில் அதானியின் துறைமுகம், சிறப்பு பொருளாதார மண்டலம், அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்களை தங்கள் அரசு பென்ஷன் நிதி போர்ட்ஃபோலியோவில் இருந்து நீக்கியுள்ளது. போர், அதிகளவிலான ஏற்கவே முடியாத ரிஸ்க்குகள் எடுக்கப்பட்டுள்ளதாக நார்கெஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் அதானி நிறுவனத்தின் துறைமுகங்களை பட்டியலில் இருந்து தூக்கியுள்ள நார்வே மத்திய வங்கி, அமெரிக்காவின் எல் 3 ஹாரிஸ் டெக்னாலஜி மற்றும் சீனாவின் வெய்சாய் பவர் ஆகிய நிறுவனங்களையும் தங்கள் பென்ஷன் நிதி பட்டியலில் இருந்து தூக்கியுள்ளது. கடந்த மார்ச் 2022 முதல் அதானியின் துறைமுகங்கலை அந்நாட்டு வங்கி கண்காணித்து வருவதாகவும், நார்வே நாட்டில் தொழில்தர்ம கவுன்சில் அதானி குழுமத்தை பட்டியலில் இருந்து நீக்க கடந்தாண்டு நவம்பர் 21 முதல் பரிந்துரைத்திருப்பதாக நார்கெஸ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.