இஸ்ரேலுடன் 14 இந்திய நிறுவன தொடர்பு தெரியுமா…
இஸ்ரேல் நாட்டில் இந்தியாவின் சிலமுக்கிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தொடங்கியிருக்கின்றனர்.ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் தரைமட்டமாகியிருக்கின்றன. இந்த சூழலில் அங்கு அதானி நிறுவனத்தின் துறைமுகம் ஒன்றும் உள்ளது. ஐஃபா நகர துறைமுகம் அதானி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறைமுகமாகும். ஹமாஸ் தாக்குதலால் அதானி குழும பங்குகள் 5%வரை சரிவை கண்டுள்ளன. குறிப்பிட்ட அந்த துறைமுகத்தில் வெறும் 3%பங்குகள், சரக்குகள் மட்டுமே கையாளப்படுவதாக அதானி குழுமம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இதேபோல் பிரபல சன் பார்மா நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான டாரோ மருந்து நிறுவனமும் உள்ளது. இதன்பங்கு மதிப்பும் 2%சரிந்தது. டாக்டர் ரெட்டி, லுபின் உள்ளிட்ட நிறுவனங்களின் கிளைகளும் டெல் அவிவில் உள்ளன. அங்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று இந்திய நிறுவனங்கள் சரிபார்த்து வருகின்றன. கல்யாண் ஜுவல்லர்ஸ், டிசிஎஸ்,விப்ரோ, டெக் மகிந்திரா,இன்போசிஸ்,எஸ்பிஐ,எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களும் இஸ்ரேலில் தங்கள் கிளைகளை வைத்துள்ளன.இந்த 14 நிறுவனங்கள் மட்டுமின்றி பல எண்ணெய் நிறுவனங்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது.தேர்தல் வரஉள்ள நேரத்தில் இந்த தாக்குதல் இந்திய நிறுவனங்களுக்கும் தலைவலியை உருவாக்கியுள்ளது. இர்கான், ஜூபிடர்வேகான்ஸ்உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த பங்குகளும் பெரியளவில் வீழ்ச்சியை கண்டுள்ளன. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல இந்த போர் சம்பவங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் விலையை மீண்டும் எகிறச் செய்திருக்கின்றன. ஹமாசுக்கு ஆதரவளிக்கும் ஈரான் இதில் ஈடுபட்டால்தான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயில் பிரச்னை வரும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்