ரியல்மீ செய்த நல்ல காரியம் தெரியுமா…
இந்த உலகில் எதுவுமே இலவசம் கிடையாது என்பதற்கு முக்கியமான சான்று செல்போன்களும்,அதன் சேவைகளும். வாடிக்கையாளரின் அறிவுக்கு தெரியாமலேயே தகவல்களை பல செல்போன் நிறுவனங்களும், பெரிய டெக் நிறுவனங்களும் திருடி வருகின்றன என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் ரியல் மீ நிறுவனம் அண்மையில் Enhanced Intelligent Services என்ற பெயரில் சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர் தனது தகவல்களை தரலாமா வேண்டாமா என்பதை இறுதி செய்துகொள்ள இயலும்.இது மோசமானது என்று வாடிக்கையாளர் ஒருவர் டிவிட்டரில் எழுப்பிய புகாரை அடுத்து இந்த வசதியை ரியல்மீ நிறுவனம் ரத்து செய்துள்ளது. ரியல்மீ 11 புரோ ,ரியல்மீ 11 பிளஸ் புரோ, ஆகிய செல்போன்களில் இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் செல்போனில் உள்ள அம்சங்கள் வாடிக்கையாளருக்கு தெரியாமலே பயன்படுத்தப்பட்டு வந்தது. ரியல் மீ நிறுவனம் சீனாவுக்கு சொந்தமானது என்பதால் இந்திய தரவுகளை சீனா திருடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உள்ளூர் விதிகளை மதிப்பதாகக் கூறி,இந்த புதிய வசதியை ரியல்மீ நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.