அமேசான் ஓனர் பங்களாவின் விலை தெரியுமா??
அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெஃப் பெசாஸ் அண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவில் 68மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் 560 கோடி ரூபாயாகும். அதிவேகமாக வளர்ந்து வரும் அமெரிக்க ரயில் எஸ்டேட் துறையின் முக்கிய இடத்தில் இந்த பங்களாவை அவர் வாங்கியுள்ளார். 2.8 ஏக்கர் பரப்பளவில் 3 படுக்கை அறை கொண்டதாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களாவுக்கு பில்லினியர் பங்கர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்திலேயே இந்த பங்களாவை ஜெப்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.1982ஆம் ஆண்டு இதே பங்களா அப்போது 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது பெரிய தொகையாக இருந்தது. 59 வயதாகும் பெசாஸ் அதே பகுதியில் புதிதாக வேறு சில இடங்களையும் வாங்க திட்டமிட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வாஷிங்டன் டிசி, பெவர்லி ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் அடுக்கடுக்காக பல வீடுகளை வாங்கி குவித்து வருகிறார் ஜெஃப் பெசாஸ்.மேன்ஹாட்டன்,சியாட்டல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கரில் அவருக்கு சொத்து உள்ளது.இந்த பகுதியில்தான் இவர் தனது புளூ ஆர்ஜின் ராக்கெட்டை ஏவ இருக்கிறார். 2021ஆம் ஆண்டு அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகிய பெசாஸ் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது லாரென் சான்செஸ் என்பவருடன் பழகிவருவது குறிப்பிடத்தக்கது.