ஐடிசி ஹோட்டல்களின் பங்கு விலை தெரியுமா..?
ஐடிசி நிறுவனத்தின் அனைத்துப்பிரிவு வணிகங்களும் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஐடிசி குழுமத்தில் இருந்து ஹோட்டல் வணிகத்தை மட்டும் பிரிக்க இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஐடிசி ஹோட்டல் நிறுவன பங்கின் விலை 21 ரூபாயாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 15 முதல் 23 ரூபாய் வரை ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.கடந்த 24 ஆம் தேதி இந்த பங்கின் மதிப்பு திருத்தப்பட்டது. ஐடிசி நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் 4.3%அளவுக்கு சரிவு ஏற்பட்டு 469.35 ரூபாய்க்கு ஐடிசி நிறுவன பங்குகள் விலை சரிந்தன.ஐடிசி குழுமத்தின் மொத்த வணிகத்தில் 4%மட்டுமே ஹோட்டல் துறை பங்கெடுத்துள்ளது. ஜெப்ரீஸ் என்ற நிறுவனம், ஐடிசியின் பங்கு மதிப்பு 21 ரூபாயாக இருக்கும் என்று கணித்தது.இந்திய தரகு நிறுவனங்களும் இதே அளவில்தான் ஐடிசி ஹோட்டல் நிறுவன பங்குகளின் மதிப்பை செய்துள்ளது. கொரோனாவுக்கு பிந்தய காலகட்டத்தில் ஹோட்டல் துறை பங்குகள் நல்ல ஏற்றம் பெற்று வரும் நேரத்தில் ஐடிசி நிறுவனம் சரியான முடிவை எடுத்துள்ளதாக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு ஐடிசி நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவு வருமானம் மட்டும் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் உலக்கோப்பை மற்றும் ஜி20 மாநாடுகள் நடக்க உள்ளதால் ஹோட்டல்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை தனியாக பிரித்தது சரிதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் முதலீட்டாளர்களுக்கு அந்த நம்பிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.Welcomhotel, Mementos, Storri உள்ளிட்ட பெயர்களில் புதுப்புது ஹோட்டல்களை ஐடிசி நிறுவனம் திறக்க இருக்கிறது. ஐடிசி ஹோட்டல் நிறுவன பங்குகளில் 40 விழுக்காடு ஐடிசி நிறுவனமும் மீதமுள்ள 60 விழுக்காடு பங்குகள் பொதுமக்கள் பங்குகள் மூலம் தர இருப்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.