FTX -ன் கதை தெரியுமா..?
அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பேங்க்மேன் பிரைடு என்ற 31 வயது இளைஞர்தான் FTXஎன்ற கிரிப்டோ கரன்சியின் உரிமையாளராக இருக்கிறார். இவர் வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு நன்கொடையாக அளித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. 2022-ல் நடந்த இடைக்கால தேர்தலுக்கு இவர் இந்த பணத்தை செலவு செய்ததாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக ஃபிரைடு மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் அண்மையில் ஆரம்பித்த FTX என்ற கிரிப்டோ கரன்சி பெரிய திவாலை சந்தித்தது. 2022ஆம் ஆண்டு மோசடி வழக்கில் சாம் கைதாகி இருக்கிறார். ஏற்கனவே பல வழக்குகள் அவர் மீது உள்ள நிலையில் கடந்த வாரத்தில் புதிதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேன்ஹாட்டன் நகரில் இவரின் மீதான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா மட்டுமின்றி FTXநிறுவனத்தில் உலகின் பல நாடுகளைச் சே்ர்ந்தவர்களும் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் போட்ட பணத்துக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை. இப்படி தேவையில்லாத நன்கொடைகளை கொடுத்துதான் அவர் திவாலாகியிருப்பார் என்பதை கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக வர்ணிக்கின்றனர். அப்போது சாமிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் தற்போது எஸ் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.