விப்ரோ பங்குகளை திரும்ப வாங்கும் கதை தெரியுமா…
விப்ரோ நிறுவனம் தனது சொந்த பங்குகளையே 12ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இது கடந்த காலங்களில் நடந்ததைவிடவும் மிகமிக அதிகமாகும். அப்படி கடந்த காலகட்டங்களில் எவ்வளவுதான் பங்குகளை திரும்ப வாங்கியது விப்ரோநிறுவனம் என்பதை காணலாம்.. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் விப்ரோ நிறுவனம் தனது பங்குகளை 9ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்களிடம் இருந்து திரும்ப வாங்கிக்கொண்டது. கடந்தாண்டின் 4-வது காலாண்டில் அந்த நிறுவனத்தின் வருமானம் 23ஆயிரத்து 190 கோடி ரூபாயாக பதிவானது. இது எதிர்பார்த்த அளவை விட மிகக்குறைவாகும். விப்ரோ நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டுஏப்ரல் மாதத்தில் 2ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுள்ள பங்குகளை திரும்ப வாங்கிக்கொண்டது. 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 11ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அந்த நிறுவனம் திரும்ப வாங்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது. இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் 10ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அந்நிறுவனம் திரும்ப வாங்கிக்கொண்டது. இதற்கு அடுத்தபடியாக நாம் முன்பே கூறியது போல கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பங்குகளை அந்நிறுவனமே திரும்ப வாங்கிக் கொண்டுள்ளது. விப்ரோ பங்குகளை திரும்பப்பெறும் நடவடிக்கையில் ஒரு பங்கின் விலை ரூ.445 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.