நிதியமைச்சர் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை பேசியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை எளிய மக்களும் வாங்கும் விலையில் உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் பாராட்டினார். ஆப்ரிக்காவில் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளில் 50% இந்தியாவில் இருந்து செல்கிறது என்று பேசிய நிதியமைச்சர்.இதேபோல் அமிர்ககாவுக்கு 40%,பிரிட்டனுக்கு 25% அடிப்படை மருந்துகள் செல்கின்றது என்றார். கொரோனா சூழலின்போது தேவைப்படும் நாடுகளுக்கு இந்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததை மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் நினைவுபடுத்தினார். கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் தீர்க்கமான முடிவுகளால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பேசினார். சீனாவில் தற்போது மீண்டும் அசுர வேகத்தில் கொரனா பரவி வருவதால் தேவைப்பட்டால் உலக சுகாதார அமைப்பின் அனுமதி கோரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.