நா எங்க, எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா…!!!
நல்லதோ கெட்டதோ ஒரு முட்டு முட்டிப்பார்போம் என்பதில் தீவிரமாக இருப்பவர் பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். மிகக்குறுகிய காலகட்டத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற எலான் மஸ்கை கடந்த 2021ம் ஆண்டு டைம் இதழ் தனது அட்டைபடத்தில் பதிவிட்டு பெருமை படுத்தியது. இந்த சூழலில் அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்துள்ள எலான் மஸ்க் , டைம்ஸ் இதழில் தனது பெயரும் புகைப்படமும் வந்ததை நினைவுபடுத்தி, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏறிய வேகத்தில் ஒரே ஆண்டில் டமால்னு சரிந்த அவரின் சாம்ராஜ்யம் குறித்தும் உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 72% குறைந்துள்ளன. டிவிட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய எலான் மஸ்க், டிவிட்டரின் முதன்மை பதவியை வகிக்கலாமா வேண்டாமா என்று பொதுவான கணக்கெடுப்பையும் டிவிட்டரில் எடுத்தார். அதில் மஸ்க் தொடர வேண்டாம் என்பதே பலரின் விருப்பமாக இருந்தது