இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்கள் எது தெரியுமா.??
நீங்கள் டிவியில் பார்க்கும் 10-ல் பெரும்பாலான விளம்பரங்கள் கட்டுமான நிறுவனங்கள் இல்லையென்றால் கார் விளம்பரங்களாகத்தான் இருக்கும். இத்தனை பெரிதாக கூவி கூவி விற்கும் கார்கள் நிஜமாகவே பாதுகாப்பானவையா என்றால் அதற்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை. கார்களின் தரத்தை பரிசோதிக்க NCAP என்ற பிரிட்டன் நிறுவனம் பல்வேறு பரிசோதனைகளை செய்து அறிக்கையை வெளியிடுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான கார்கள் பெரிதாக எந்த பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அதிர வைக்கிறது NCAP அறிக்கை. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கார்களில் இருக்கும்போது விபத்து நேரிட்டால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று GNCAP என்ற அமைப்பு ஆராய்ந்துள்ளது. அதில் இந்தியாவில் விற்கப்படும் skoda kushaq,volkswagen taigun ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் போக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் skoda slavia,Mahindra XUV ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன, டாடா பஞ்ச், மகேந்திரா xuv 300 ஆகிய கார்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.