எந்த கம்பெனி எவ்ளோபேர தூக்கியிருக்கு தெரியுமா?
நிறுவனம் லாபத்துல போகும்போது மட்டும் மாதச்சம்பளம்தான் தருவோம்..நஷ்டத்துல போகும்போது வேலைக்கு ஆளே வேணாம்னு விரட்டி அடிப்பது தொடர் கதையாகியுள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்துக்கு அப்புறம் வேலையை விட்டு நீக்கப்படும் டெக் கம்பெனி ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரமணா பட விஜயகாந்த் பாணியில் சில புள்ளி விவரங்களை பார்ப்போம்… கொரோனாவுக்கு பிறகு மட்டும் 522 டெக் நிறுவனங்கள் இதுவரைக்கும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 208 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலை,பணவீக்க அழுத்தம் ஆகியனதான் மிகமுக்கிய பிரச்சனைகளாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமேசானில் மட்டும் இதுவரை 27ஆயிரம் பேர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். முதலில் 18 ஆயிரம் இப்போது 9 ஆயிரம் பேர் வேலை இழந்திருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் பேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா இருக்கிறது.ஏற்கனவே 11 ஆயிரம் பிளஸ் இப்ப ஒரு 10ஆயிரம் பேருக்கு வேலை காலியாகிப்போச்சுது. அக்சென்சர் 19 ஆயிரம் பேரை தன் பங்குக்கு வேலையை விட்டு நீக்குகிறது. கூகுளின் தாய் நிறுவனமான ஆலஃபபெட் 12 ஆயிரம் பேரை தூக்குகிறது. கூகுளில் வேலையில் இருந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரமாக இருந்தது. அதில் இருந்து தற்போது பெரிய அளவு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மைக்ரோசாஃப்ட் 10,000,சேல்ஸ் போர்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் 10%, டெல் நிறுவனம் 6,650,எச்பி 6,000,டிவிட்டர் 7,500 என ஜாம்பவான் நிறுவனங்களுக்கே இந்த சூழல் ஆட்டம் கண்டுள்ளன என்றால் மிகையாக இருக்காது. அமெரிக்காவில் ஆப்பிளும், இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனமும்தான் குறைந்த பாதிப்புகளை சந்தித்துள்ள முக்கிய இரண்டு நிறுவனங்களாக திகழ்கின்றன.