பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி யாரைப்பார்த்தார் தெரியுமா…?
செமிகண்டக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை டீல் செய்வதில் தேர்ந்த நிறுவனமாக பாக்ஸ்கான் நிறுவனம் திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைவர் குஜராத்தில் பிரதமர் மோடியைநேரில் சந்தித்து பேசினார்.செமிகான் இந்தியா 2023 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை பாக்ஸ்கான் அதிகாரி நேரில்சந்தித்து பேசினார். பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவராக Young Liu இருக்கிறார்.இந்த நிறுவனம் அண்மையில் வேதாந்தா குழுமத்துடனான 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூட்டு நிறுவனம் தொடங்கும் ஒப்பந்தத்தை அண்மையில் ரத்து செய்தது.இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிறுவனம் திடீரென கைவிடப்பட்டது. இந்த கைவிடப்பட்ட முயற்சிச்கு பிறகு முதல் முறையாக பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி பிரதமரை சந்தித்துள்ளார் இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தைவானுடன் செமிகண்டக்டர் ஒப்பந்தம் செய்ததில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பங்கு முக்கியமானது என்றும், பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய செமிகான் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் ஆலைகளை நிறுவ 50விழுக்காடு வரை நிதி உதவியை மத்திய அரசாங்கம் செய்யத் தயாராக இருக்கிறது என்றார். இதனிடையே பிரதமர் மோடியை மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் சிஇஓ நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.குஜராத்தின் சனந்த் தொழில் பூங்காவில் புதிய அசெம்பிளி ஆலையை மைக்ரான் நிறுவனம் தொடங்க இருக்கிறது.இந்த ஆலை இந்தாண்டே உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.