ஐபோன் வேகமா சார்ஜ் ஏறணுமா..இந்தாங்க டிப்ஸ்..
ஐபோன்கள் சார்ஜ் ஏற்றுவது என்பது ஆமை வேகத்தில் நடக்கும் ஒருபணி என்று பலரும் புலம்பி வருகின்றனர். ஆனால் அதனை வேகப்படுத்த முடியும் என்று ரகசியத்தை ஆப்பிள் நிறுவனம் உடைத்திருக்கிறது.ஆனால் ஒரு நிபந்தனை என்றும் ஆப்பிள் டுவிஸ்ட் வைத்துள்ளது. புதிய டிரிக்ஸை பயன்படுத்தினால் ஐபோன் சார்ஜ் நேரம் 30 நிமிடங்களில் பாதி சார்ஜ் ஏறிவிடுமாம்.
புதிய ஐபோனில்தான் இது நடக்கும் என்று இல்லாமல் ஆப்பிள் 8 அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா போன்களுக்கும் பொருந்தும் வகையில் புதிய டிரிக் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் டைப்சியில் இருந்து லைட்னிங் கேபிள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 18W, 20W, 29W, 30W, 35W, 61W, 67W, 87W, 96W, or 140W USB-C பவர் அடாப்டர் இருப்பதும் அவசியம். 3ஆம் தர கம்பெனி சார்ஜர் போட்டால் எந்தளவுக்கு வேகமாக சார்ஜ் ஏறும் என்று உறுதி அளிக்க முடியாது என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. அதீத வெயில் மற்றும் அதீத குளிர் உள்ள பிரதேசங்களில் இந்த டிரிக் வேலை செய்வது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளது. இது மட்டுமின்றி லோ பவர் மோட் என்ற அம்சத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐபோனின் பிரைட்னஸை கூடவோ, குறைக்கவோ செய்தாலும் பேட்டரியை காப்பாற்றலாமாம்.பிரைட்னஸ் 65-70%அளவில் வைத்தால் நீண்டகாலத்துக்கு பேட்டரி வருமாம். வழக்கமான ஆண்டிராய்டு போனை போலவேபாஸ்ட் சார்ஜிங் ஐபோன்களிலும் சாத்தியம் என்று கூறியுள்ள அந்நிறுவனம், வேகமாக சார்ஜ் எறினால் இரண்டு முறை டிங் சவுண்ட் வரும் என்றும் தெரிவித்துள்ளது. ஐபோன் 11-ல் 65 வாட் சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் போட்டாலும் அதனால் 18வாட்ஸ் வரை மட்டுமே ஏற்றுக்கொள்லள முடியும் என்றும் அதற்கு மேல் வரும் ஆற்றல் போனை சூடுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.