வீட்ல இருந்து வேல பாக்கிறீங்களா??? போச்சு போங்க !!!
பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை இன்னும் முழுமையாக நீக்கவில்லை. வீட்டில் இருந்து பணியாற்றும்போது அதிக உத்வேகத்துடனும் அதிக செயல்திறனுடனும் பணியாற்றுகிறார்கள் என்கிறது புள்ளி விவரம் ,இந்தநிலையில் ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தங்கள் நிறுவனம் எல்லா பணியாளர்களையும் அலுவலகத்துக்கு வந்தே ஆக வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலேயே இருந்து பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் அவர்எச்சரித்துள்ளார். வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் பணியில் இருப்போருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ள அவர், ஒரு நிறுவனத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் அவர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அண்மையில்தான் அந்த நிறுவனத்தில்கணிசமான நபர்களை வேலையில் இருந்து நீக்கிய நிலையில் அதன் தலைவரின் இந்த பேட்டி ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அலுவலகத்துக்கு வந்து வேலைப்பார்க்கும் நபர்கள் தங்களை தாங்களே எப்படி வளர்த்துக்கொள்ள முடியும் என்று பார்ப்பதாகவும் 25 விழுக்காடு பணியை திறம்பட செய்வதாகவும் ஆய்வு கட்டுரை ஒன்றும் கூறுகிறது. கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை நடத்தும் விதம் கொரோனாவுக்கு பிறகு மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும்
ஒருபக்கம் பணியாளர்களை நீக்கி வரும் ஐபிஎம் நிறுவனம் புதிதாக 7ஆயிரம் பேரை வேலைக்கு சேர்த்துக்கொண்டுள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரே ஒர்க் பிரம் ஹோம் பற்றி எழுப்பியவிமர்சனம் உலகளவில் பெரிய விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.