ஆராய்ச்சி செய்ய மருத்துவர்கள் கோரிக்கை..
கோவிஷீல்ட் மருந்தின் பக்க விளைவுகளை அரசாங்கம் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம், அரிதிலும் அரிதாக தங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்த உறைதல் பிரச்சனை ஏற்படும் என்று குறிப்பிட்டது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் மருந்துக்கு கோவிஷீல்ட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த மருந்தை இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் மருத்துவர்கள் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். கோவிட் மருந்துகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் முன்வரவேண்டும் என்று அவேக்கன் இந்தியா மூவ்மண்ட் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட மருந்தால் வரும் தீவிர பாதிப்புகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். கோவிட் 19 மருந்துகள் செலுத்திக்கொண்டதால் அதன் விளைவுகள் என்ன ஆகுமோ என்ற அச்சம் பலரிடமும் இருக்கிறது. ஏனெனில் பல மருந்துகள் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்படவே இல்லை. கடந்த 2022-ல் ஏராளமான பெண்களுக்கு மாதவிடாயில் பிரச்சனைகள் எழுந்ததற்கும் கொரோனா தடுப்பூசியே காரணம் என்றும் கூறப்பட்டது.
கோவிட் தடுப்பூசிகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தனது கொரோனா மருந்தை திரும்பப்பெற்று வரும் நிலையில் அது குறித்து ஆய்வு நடத்த AIM அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ,ஆஸ்ட்ராஜெனகாவும் இணைந்து தான் இந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இந்நிலையில் 2021-க்கு பிறகு நடந்த அரிதிலும் அரிதான மரணங்கள் குறித்து கோவிஷீல்ட் மருந்து உற்பத்தியாளர்கள் தரவுகளை சேகரித்தும் வைத்துள்ளனர்.