தங்கத்தின் பக்கம் திரும்புகின்ற முதலீட்டாளர்கள்..
அதிக பணவீக்கம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பல முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர். தங்கத்தின் அளவு வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அதன் விலை உயர்கிறது.
கடந்த 5 லிருந்து 7 ஆண்டுகளில், ஃபின்டெக்ஸ் ’டிஜிட்டல் தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது, இருப்பினும், ’செபி’யின் தடையால் கடந்த ஆண்டில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
தங்கத்தை வாங்கினால் 3% சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்த வேண்டும். இது SGBகள் அல்லது ETFகளுக்குப் பொருந்தாது. தங்கத்தை லாபத்தில் விற்கும்போது, மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். ஆக எப்படிப் பார்த்தாலும் அது ஒரு ’இறந்த’ சொத்து.
மூன்று ஆண்டுகளுக்குள் தங்கப் பத்திரங்களை விற்றால் இது ஸ்லாப் விகிதத்தில் இருக்கும். மூன்று வருடங்கள் வாங்கிய பிறகு விற்றால், நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டும், எட்டு வருடங்களின் முடிவில் SGBகள் முதிர்ச்சியடையும் போது கிடைக்க பெறும் ஆதாயங்களுக்கு இது பொருந்தாது. இந்த ஆதாயங்கள் வரி இல்லாதவை.