15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி கண்ட டாலர்….
அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு என்பது எதிர்பார்த்ததைவிட கடந்தவாரம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலர் குறியீடு கடந்த ஏப்ரல் 2022க்கு பிறகு மீண்டும் 99.587புள்ளிகளாக குறைந்துள்ளது.
அமெரிக்க பணவீக்கம் என்பது ஓரளவு குறைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தில் அதிகரிப்பை செய்யாமல் தவிர்த்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த முறை பண வணிகம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்வை சந்தித்திருந்தாலும் டாலரின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
அமெரிக்க வங்கிகளுக்கு நேர் எதிராக யூரோ தற்போது விலையேற்றம் கண்டு வருகின்றது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை மாற்றாத நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கிகள் தனது கடன் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியிருக்கிறது. இதன் விளைவாக யூரோவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் ஏற்கனவே வர்த்தகத்துறை சரிவை கண்டுள்ள நிலையில் ஐரோப்பாவில் வரும் செப்டம்பரில் மேலும் ஒரு வட்டி உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெர்லிங்கின் மதிப்பு 0.3 விழுக்காடு உயர்ந்துள்ளது.இதேபோல் ஜப்பானிய என்னின் மதிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.நியூசிலாந்தின் டாலர் சரிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய டாலர் பெரிய அளவில் மாற்றம் பெற வில்லை. சீனாவில் நிலவும் மோசமான நிலை குறித்த தகவல்களை அடுத்தே ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் தரவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா வரும் நாட்களில் நல்ல வளர்ச்சியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவரும் புதிய திட்டங்களை சீனா தயாரித்து வைத்துள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மேலும் சரியவே அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.