துருபிடிக்காத எஃக்கு.. – 20 மில்லியன் டன் தேவை..!!
உள்நாட்டில் துருப்பிடிக்காத எஃகு தேவை 2047 நிதியாண்டில் 20 மில்லியன் டன்னை (MT) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
2022-ம் ஆண்டு நடைபெற்று வரும் குளோபல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்ஸ்போவில் (GSSE) எஃகு கூடுதல் செயலாளர் ரசிகா சௌபே இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையின்படி 2040 மற்றும் 2047 நிதியாண்டுகளில் நுகர்வு முறையே 12.5-12.7 MT மற்றும் 19-20 MT ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருப்பிடிக்காத ஸ்டீலின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். நாட்டின் தனிநபர் துருப்பிடிக்காத எஃகு நுகர்வு 2010 இல் 1.2 கிலோவிலிருந்து 2022 நிதியாண்டில் 2.5 கிலோவாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
துருப்பிடிக்காத எஃகு தனிநபர் நுகர்வு 2040-ல் 8-9 கிலோவாகவும், 2047-ல் 11-12 கிலோவாகவும் இருக்கும்.
எஃகு பயன்படுத்தப்படும் பல்வேறு துறைகளில் அரசாங்கம் செலவழிப்பதன் காரணமாக இந்த வளர்ச்சி வேகமாக உயரும் என்று சௌபே தனது உரையில் கூறினார்.
துருப்பிடிக்காத எஃகு தொழிலுக்காக முதன்முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.