டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் கிட்ட காசு வாங்க கூடாது:போன்பே சிஇஓ
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம்அளித்து வருகிறது. இந்த சூழலில் அண்மையில் தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்.பி.சி.ஐ வாடிக்கையாளர்களிடம் இருந்து டிஜிட்டல் வழியாக பெரும் பணத்துக்கு வணிகர்கள்தான் 1.1 விழுக்காடு பணத்தை அரசுக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த தகவல் சாதாரண மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யுபிஐ வாயிலாக செலுத்தினால் பணம் வாடிக்கையாளர் தரவேண்டும் என்ற வகையில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நிலைமை இப்படி இருக்கையில், ஐஐடி மும்பை அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில் ஒரு நேரம் இந்திய அரசு பணம் வசூலிப்பதாக இருந்தால் 0.3விழுக்காடு வணிகர்களிடம் இருந்து பெறலாம் என்று பரிந்துரைத்திருந்தது. இதன் வாயிலாக அரசுக்கு 5ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும். இந்த சூழலில் போன்பே நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீர் நிகாம் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் இதுவும் டிஜிட்டல் வரிதான் என்றும் கூறியிருக்கிறார். போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவதில்லை என்றும் வணிகர்களுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே பணம் வசூலிக்கப்படுவதாகவும் சமீர் கூறியுள்ளார். டிஜிட்டல் வரியில் எந்த சுமையாக இருந்தாலும் அவற்றை வணிகர்களிடம்தான் வசூலிக்க வேண்டுமே தவிர வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் வசூலிக்கக் கூடாது என்பதே தனது விருப்பம் என்றும் சமீர் கூறியிருக்கிறார்.