லிமிட்டுக்கு மேல போக கூடாது…
முறைபடுத்தப்படாத நிதி இன்புளுயன்சர்களுக்கு செபியின் தலைவர் மதாபி புரி புச் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக பரஸ்பர நிதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்புளூயன்சர்கள், அதனுடன் மட்டும் இல்லாமல் சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தின் பணியாளர்களாகவே மாறிவிடுவதாகவும் சாடியுள்ளார். பரஸ்பர நிதியில் இல்லாத ஒன்றை அதன் முகவர் தெரிவித்தார். அதற்கு அந்த பரஸ்பர நிதி நிறுவனம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மதாபி எச்சரித்துள்ளார். விதிகளை மீறி சிலர் பொய்யான விளம்பரம் வெளியிடுவதாகவும், அவர்கள் மீது அதாவது அந்த சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதாபி குறிப்பிட்டுள்ளார. சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும், மியூச்சுவல் ஃபன்ட் விநியோகிப்பவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ள இவர், சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்கள் செய்யும் செயல்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்கும் நிலையில் முறைப்படுத்தப்படாத நிதி இன்புளுயன்சர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர நிதிக்கான உரிமையை பெற்றுவிட்டு அவர்கள் F&O பற்றியோ, டிரேடிங் பற்றியே மக்களிடம் பேசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விதிமுறைகளை மீறக்கூடாது என்பதில் செபி தெளிவாக உள்ளதாகவும், முறைப்படுத்தப்பட்ட நிதி ஆலோசனை மற்றும் பரஸ்பர நிதியின்யின் சார்பில் முகவர்கள் ஆலோசனை வழங்கலாம் என்றும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.