செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடாதீங்க.. !!!
செயற்கை நுண்ணறிவு நுட்பம் தொடர்பாக பல இடங்களில் முன்னோடியாக திகழ்ந்த நிறுவனம் கூகுகள்.இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் அமைத்த அடித்தளம்தான் பின்னாளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பரவலாக்க அடிப்படையாக அமைந்திருந்தது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் தேவை என்று ஒறு பக்கம் மக்கள் கருத்து தெரிவித்து வந்தாலும்,அதன் பின்னால் ஓடக்கூடாது என்றும் எச்சரிக்கையுடன் தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்றும் சுந்தர்பிச்சை குறிப்பிட்டார். போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு வசதியில் அதிவேகத்தில் ஓடினாலும்,அந்த போட்டியில் கூகுள் நிறுவனத்தால் சமாளிக்க இயலவில்லை.தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கூகுள் நிறுவனம் கடுமையாக போராடி வருகிறது. எந்த ஒரு பெரிய செயலை செய்தாலும் சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாகவும்,சுமூகமாகவும் இருக்கும் என்று வல்லுநர்கள நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சுந்தர்பிச்சை கூறும் விழிப்புணர்வு எப்படி வேலைசெய்கிறது என்பது வரும்நாட்களில்தான் தெரியவரும்.