உங்க இஷ்டத்துக்கு இன்ஷூரன்ஸ் விக்காதீங்க..!!!!!!!
ஒருநாளில் வரும் 10 விளம்பரங்களில் 6 விளம்பரங்கள் காப்பீடு குறித்து வருகிறது. இதுவே நம்மை எரிச்சலடைய வைக்கும் நிலையில், பொதுத்துறை வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கண்டபடி காப்பீட்டு திட்டங்களை விற்றுத்தள்ளி வருகின்றனர். இது பற்றி பலதரப்பட்ட புகார்கள் மத்திய நிதியமைச்சகத்துக்கு குவிந்தன. இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கண்டபடி காப்பீட்டு திட்டங்களை விற்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இந்தியாவின் 2-3ம் தர நகரங்களில் 75க்கும் அதிகமான வயதுள்ளோரிடம் கூட காப்பீடுகளை மறைமுகமாக சில வங்கிகள் விற்றுள்ளதாக புகார் கிளம்பியுள்ளதையும் நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் எப்படியாவது சாதாரண மக்களின் தலையில் காப்பீட்டு திட்டத்தை கட்டிவிடவேண்டும் என்ற முனைப்பும், ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கவும் இது போன்ற சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 2021-22-ல் மட்டுமே 23ஆயிரத்து 110 பேரிடம் தவறுதலாக காப்பீட்டு திட்டங்கள் விற்றுள்ளதாக புகார்தெரிவித்துள்ளது.