வேதனைப்படாதீங்க !!!! சொல்கிறது நிதியமைச்சகம்…
இந்தியாவில் வீடுகளில் சேமிப்பு அளவு குறைந்தால் கவலைப்படாதீர்கள் என்று நிதியமைச்சகம் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளது. 2022 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.7%அளவுக்கு வீடுகளில் சேமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சகம்,கடந்த 8ஆண்டுகளில் வீடுகளின் சேமிப்பு அளவு 9.2%ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள சேமிப்பு அளவு 22.8 லட்சம் கோடி ரூபாயாக 21 நிதியாண்டில் இருந்ததாகவும்,கடந்த நிதியாண்டில் 17லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது 23 நிதியாண்டில் 13.8லட்சம் கோடி ரூபாயாகவும் சரிந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சேமிப்பு சரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நிதியமைச்சகம் இப்படி ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளது.வீடுகளில் சேமிப்பு குறைந்தால் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ள நிதியமைச்சகம்,வருங்கால வேலைவாய்ப்பு மற்றும் வருமான உறுதிக்காக இந்த தொகை செலவிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளில் பணம் சேமிப்பு குறைந்திருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு என்று எஸ்பிஐ ஆய்வு கூறுகிறது.கொரோனா காலகட்டத்தில் வட்டி குறைவாக இருந்ததால் தங்கள் சேமிப்புகளை மக்கள் சொத்துகளாக மாற்றியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஏராளமானோர் வீடுகளாகவும்,கல்விக்காகவும் செலவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.