இந்தியாவே வேணாம்டா ஐயா..!!!
CBRE என்ற அமைப்பு இந்தியாவில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள் குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி 2 ஆண்டுகளில் இந்தியர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு இடம்பெற ஆர்வம் காட்டி வருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே 16%இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 17% இந்தியாவிலேயே இருக்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்க விரும்புவோரும் புதிதாக ஒரு வீடு வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்,இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. ஜெனரேஷன் Z எனப்படும் 2கே கிட்ஸ்தான் அதிக ஆடம்பரமாக இருக்கவும் தனியார் விடுதிகளில் தங்கவும் ஆசைப்படுவதாக கூறுகிறது அந்த அறிக்கை.உலகம் முழுவதும் 20ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பின் முடிவே CBRE அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நகரத்தின் எல்லையில் யாரும் வசிக்க விரும்பவில்லை என்று கூறும் அந்த அறிக்கை நகரின் மையப்பகுதியில் இருக்கவே பலரும் விரும்புவதாகவும் கூறியுள்ளது. வீடு வாடகைக்கு எடுக்க பலரும் விரும்பாத சூழலில் பலரும் வீடுகளை நகரின் பிரதான பகுதிகளில் வாங்கவே அதிகம் விரும்புவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா வந்த பிறகு சொந்த வீட்டின் மகத்துவத்தை பலரும் புரிந்து வைத்துக்கொண்டுள்ளதாகவும், வீடுகளிலேயே அலுவலக அறைகளை வைத்து கட்ட பலரும் விரும்புவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.