டாக்டர் ரெட்டீஸின் பலே திட்டம்..
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பிறகு இந்திய மருந்து நிறுவனங்கள் பெரிய கவலையில் இருந்து வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்காவில் தனது உற்பத்தியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் 4 ஆவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பேசிய அந்நிறுவன அதிகாரி எரஸ் இஸ்ரேலி, தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவையை வழங்கி வருவதாகவும், தங்களுக்கு சேவையே முக்கியம் என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் அதிகம் கவனம் செலுத்தினால் இந்தியாவில் விநியோகம் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார். பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமின்றி நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரேலி தெரிவித்தார். டாக்டர் ரெட்டீஸின் 4 ஆவது காலாண்டின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 20 விழுக்காடு வளர்ந்து அதாவது 8,506 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த தொகையானது 7083 கோடி ரூபாயாக இருந்தது. லாபம் மட்டும் 22விழுக்காடு உயர்ந்து 1,594 கோடி ரூபாயாக இருக்கிறது. 2026 நிதியாண்டில் மட்டும் 18 முதல் 20 புதிய தயாரிப்புகளை அந்த நிறுவனம் சந்தை படுத்த இருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தங்கள் புதிய தயாரிப்புகளை அறமுகப்படுத்த இருப்பதாக கூறிய இஸ்ரேலி, அபெட்டாசெப்ட் உள்ளிட்ட சில மருந்துகள் வரும் 2027-2028 நிதியாண்டில் அமெரிக்காவில் சந்தைபடுத்தப்படும் என்றார்.
