“மின் வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு தேவை”
இந்தியாவில் மின் வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மின்வணிக நிறுவனங்கள் செய்யும் அத்துமீறல்களையும், கட்டுக்கடங்காத தள்ளுபடி அளிப்பதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CAIT அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி,செபி உள்ளிட்ட அமைப்புகளும் முன்வரவேண்டும் என்றும் வணிக அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மின்வணிக நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலையும் இன்னும் எளிமையாக்க வேண்டும் என்று CAIT அமைப்பு கோரியுள்ளது.